ஹிரோஷிமா அணு ஆயுத தாக்குதலின் 78ஆம் ஆண்டு நினைவு தினம்.. இறந்தவர்களுக்கு அமைதி மணி ஒலித்து அஞ்சலி.. !!
ஹிரோஷிமா மீது அணு குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதன் 78 ஆம் ஆண்டு நினைவு தினம் ஜப்பானில் அனுசரிக்கப்பட்டது.
இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கா அணு குண்டு வீசியது.
ஹிரோஷிமாவில் மட்டும் 20 ஆயிரம் ராணுவ வீரர்கள் உள்பட ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். ஹிரோஷிமாவில் அமைதி மணி ஒலிக்கப்பட்டு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அணு ஆயுதத் தாக்குதலிலிருந்து தப்பித்து தற்போது தள்ளாத வயதில் உள்ள முதியவர்கள் உள்பட 50 ஆயிரம் பேர் இதில் பங்கேற்றனர்.
நினைவேந்தலில் பேசிய ஜப்பான் பிரதமர் அணு ஆயுதங்களை முற்றிலுமாக அழித்துவிடுமாறு உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்தார்.
Comments