கலாச்சாரம் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.. சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் உரை
பெண்கள் கல்வி பயில்வது நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 165ஆவது பட்டமளிப்பு விழாவில் , மாணவர்ளுக்கு பட்டங்களை வழங்கி பின் அவர் உரையாற்றினார்.
கலை, இலக்கியம் என கலாசாரம் நிறைந்த மாநிலமாக திகழும் தமிழகத்தில் உள்ள கோயில்களும், சிற்பங்களும் மாநிலத்தின் கலை சிறப்பினை விவரிப்பதாக குடியரசுத் தலைவர் கூறினார்.
ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி, நீலம் சஞ்சீவ ரெட்டி, கே.ஆர்.நாராயணன், ஆர்.வெங்கட்ராமன் மற்றும் அப்துல் கலாம் ஆகியோர் சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து பயின்று குடியரசுத் தலைவரானவர்கள் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தானும் சென்னை பல்கலைக்கழகத்தில் படித்ததை குறிப்பிட்டார். வேலை கிடைத்தப் பிறகும் படிப்பதை மாணவர்கள் நிறுத்தி விட கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
Comments