சீக்கியர்களைக் கொல்ல உத்தரவிட்டதாக ஜகதீஷ் டைட்லர் மீது சிபிஐ குற்றச்சாட்டு.. !!
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பாதுகாவலர்கள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பழிக்குப் பழியாக சீக்கியர்களைக் கொன்று குவிக்க காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜகதீஷ் டைட்லர் உத்தரவிட்டதாக சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
1984 ம் ஆண்டில் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டி விட்டு, அவர்களின் கடைகளை சூறையாடியதன் பின்னணியில் ஜகதீஷ் டைட்லர் செயல்பட்டதாகவும் சாட்சிகளின் வாக்குமூலம் அடிப்படையில் சிபிஐ குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.
அவர் மீது கொலை, வன்முறையைத் தூண்டியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவாகியுள்ளன.
சீக்கியர்களைக் கொல்லுங்கள் உங்களுக்கு எதுவும் ஆகாமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கட்சித் தொண்டர்களுக்கு ஜகதீஷ் டைட்லர் உத்தரவிட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments