இன்று சர்வதேச நண்பர்கள் தினம்.. சுயநலம் இல்லாத நட்புகள் உன்னதமான காதலுக்கு நிகரானவை.. !!
இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ரத்த உறவு இல்லாமல் பந்த பாசத்தைக் கொடுக்கும் நட்பின் பெருமையை விளக்கும் செய்தித் தொகுப்பை இப்போது காண்போம்.....
நட்புக்கு இலக்கணம் என்று யாரும் வகுக்கவில்லை. ஆனால் நட்பே மானிட வாழ்வின் இலக்கணம் ஆகும். மனிதர்கள் அந்நியர்களாக பிறந்தவர்கள். யாரும் யாருக்கும் உறவில்லை என்பது போல. ஆனால் வாழும் போது பலரோடு நட்பில் கலக்கின்றனர்.
சில நட்புகள் ரயில் சிநேகம் போல சில நாட்களுக்குள் மறந்துவிட்டாலும் சிலரை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நீண்டதொரு பந்தம் உருவாகி விடுகிறது.
பள்ளிப் பருவத்தில் இருந்தே மாணவர்களிடையே நட்பு மலர்கிறது. கல்லூரி நட்புகள் காலப்போக்கில் பிரிந்தாலும் நினைவை விட்டு அகலுவதில்லை
ரத்த உறவுடைய சகோதரர்கள் கூட தராத பாசத்தை சில நண்பர்கள் தருகின்றனர். சுயநலம் இல்லாத நட்புகள் உன்னதமான காதலுக்கு நிகரானவை.
எப்போதாவது சில நட்புகள் துரோகங்களாக மாறிவிடும்போது, அவை தரும் வேதனைகளும் அதிகம்தான்..
ஆண்களும் பெண்களும் நட்பாக பழகக்கூடிய ஒரு காலத்தில் வாழ்கிறோம். ஆண் பெண் நட்பும் வரம்பு மீறாத போது அது அழகிய கவிதையாகிறது.
யாரோடும் பகையில்லை எல்லோரும் நண்பர்களே என்பதே தமிழ் வகுத்த நட்பின் இலக்கணம்.
Comments