என்னம்மா இப்படி இறங்கிட்டீங்க..? ஒரு தலைக்காதலால் காதலனின் மனைவியை கொல்ல முயற்சி..! காற்றடைத்த ஊசி குத்தியதால் பிடிபட்டார்

0 4048

தனியார் மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்ணை, காற்று நிரப்பிய ஊசி போட்டு கொலை செய்ய முயன்ற போலி நர்சுவை உறவினர்கள் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்ப்டைத்தனர். ஒரு தலைக் காதலி செய்த விபரீத முயற்சி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு

இவ்வளவு பெரிய சம்பவத்தை செஞ்சிட்டு... முகத்தை மூடிக் கொண்டு நீழிக்கண்ணீர் வடிக்கும் நர்சுவின் திருமுகத்தை பார்க்க முடியலையே என்று தவிக்க வேண்டாம்... கழுத்து நிறைய நகை அணிந்து நகைக்கடை மாடல் போல காட்சி அளிக்கும் இந்த சேச்சி தான்... கொலை முயற்சி வழக்கில் சிக்கி உள்ள நர்சக்கா அனுஷா..!

கேரள மாநிலம் திருவல்லா புல்லு குளங்கரை பகுதியை சேர்ந்த அருண் என்பவரின் மனைவி சினேகா. நிறைமாத கர்ப்பிணியான சினேகா பருமலா பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். குழந்தை பெற்றெடுத்த நிலையில் வெள்ளிகிழமை அவரை மருத்துவமனை நிர்வாகம் டிஸ்சார்ஜ் செய்தது. இருந்த போதிலும் நிற மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக குழந்தையை டிஸ்சார்ஜ் செய்யாததால் சினேகாவும் அவரது தாயாரும் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் குழந்தைக்காக காத்திருந்தனர் .

இந்த சூழ்நிலையில் மாலை சுமார் 5.30 மணி அளவில் நர்சு ஒருவர் அவர்களது அறைக்கு வந்து சினேகாவுக்கு ஊசி போட வேண்டும் என்று கூறவே, சினேகாவின் தாயார் அதான் டிஸ்சார்ஜ் பண்ணியாச்சே இனிமே எதற்கு எம்புள்ளைக்கு ஊசி ? என்று கேட்டுள்ளார். அதற்கு நர்சு, இல்லை.. இல்லை.. இன்னும் ஒரு ஊசி போட வேண்டி உள்ளது என்று கூறியவாறு சினேகாவின் கையை வலுக்கட்டாயமாக இழுத்து பிடித்து ஊசியை குத்த முயன்றார்.

அப்போது ஊசியில் மருந்து இல்லாததை பார்த்த சினேகாவின் தாயார் உடனே சத்தம் போட்டு கத்தியுள்ளார். ஊசியினை சினேகாவின் கையில் வைத்து அழுத்துவதற்குள்ளாக சத்தம் கேட்டு வந்த மருத்துவமனை ஊழியர்கள் அந்த நர்சை மடக்கிப்பிடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புலிக்கீழு காவல் நிலைய போலீசார் அந்தப் பெண்ணை காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்

முகத்தை மூடிக் கொண்டு வந்த அந்தப்பெண்ணை முகத்தை காட்டும்படி பெண் காவல் அதிகாரி கூற அழுது கொண்டே அந்த நர்சு மறுத்தார்

விசாரணை நடத்தியதில் அந்தப் பெண் காயங்குளம் பகுதியை சேர்ந்த 25 வயது அனுஷா என்பதும் டி.பார்ம் படித்துள்ள இவர் சினேகாவின் கணவர் அருணின் கல்லுரி நண்பனின் சகோதரி என்றும் கல்லூரி காலம் முதலே அருணை ஒருதலையாக காதலித்து வந்ததும் தெரிய வந்தது. அனுஷாவை வேறு நபருக்கு திருமணம் செய்து வைத்த நிலையில் தனது கணவரை பிரிந்து அருணை தனது காதலில் வீழ்த்த முயன்றுள்ளார். அருணுக்கு சினேகாவுடன் திருமணம் முடிந்ததால் அவரது திட்டம் பலிக்கவில்லை. தொடர்ந்து அனுஷாவிற்கு 2 வது திருமணமும் செய்து வைத்துள்ளனர் .அவரையும் பிரிந்த அனுஷா அடைந்தால் அருண்... என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.

அவரது மனைவிக்கு குழந்தை பிறந்த விவரத்தை அறிந்த அவர், இந்த நேரத்தில் சினேகாவை கொலை செய்தால் , அனாதையான குழந்தையை கவனிப்பது போல வீட்டுக்குள் புகுந்து அருணை தன் காதல் வலைக்குள் கொண்டு வந்துவிடலாம் என்று திட்டமிட்டுள்ளார். நர்சு போல சென்று மருந்தில்லாமல் வெற்று ஊசியை நரப்பில் செலுத்தினால் மாரடைப்பு ஏற்பட்டு சினேகா இறந்து விடுவார். கொலைப்பழியும் தன் மீது வராது என்று நயவஞ்சகத்துடன் அனுஷா செவிலியர் உடையை வாங்கி அணிந்து கொண்டு மருத்துவமனைக்குள் புகுந்து ஊசி குத்த முயன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

முதலில் இந்த கொலை முயற்சி சம்பவத்தில் சினேகாவின் கணவர் அருணுக்கு தொடர்பிருக்குமோ என்று போலீசார் சந்தேகித்தனர் விசாரணையில் முழுக்க முழுக்க இது அனுஷாவின் தீராத ஆசையால் நிகழ்ந்த விபரீத செயல் என்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments