நாட்டின் 508 ரயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் மேம்படுத்தும் திட்டத்தை காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
நாட்டின் 508 ரயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் மேம்படுத்தும் திட்டத்தை காணொலி வாயிலாக பிரதமர் மோடி இன்று காலை 11 மணியளவில் தொடங்கி வைக்கிறார்.
அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இந்திய ரயில்வேக்கு இது பொன்னான நாள் என்றும் பிரதமர் மோடி தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இத்திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் 18 ரயில் நிலையங்கள் இத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளன.
ரயில் போக்குவரத்துக்கான திட்டமிடலுடன் கழிவறை, எக்ஸ்லேட்டர், வை-பை , குடிநீர், போன்ற அனைத்து வகையான நவீன வசதிகளுடன் இந்த ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்படுகின்றன.
Comments