தி.மு.க. அமைச்சர்களின் சொத்துகளை வைத்து நாட்டின் கடனையே அடைக்கலாம் - அண்ணாமலை
தி.மு.க. அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் அனைவரின் சொத்து மதிப்பை சேர்த்தால் இந்தியாவின் ஒட்டுமொத்த கடனையும் ஒரே நாளில் அடைத்துவிடலாம் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மதுரை தெப்பக்குளம் பகுதியில் பேசிய அவர், தமிழகத்தை நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக மாற்றி வைத்திருப்பது தான் தி.மு.க. அரசின் சாதனை என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
முன்னதாக, 9-வது நாள் என் மண், என் மக்கள் யாத்திரையை மதுரையில் ஒத்தக்கடையில் துவக்கிய அண்ணாமலை, செல்லூர், தெற்காவணி மூல வீதி, விளக்குத்தூண் உள்ளிட்ட இடங்களில் நடைபயணம் மேற்கொண்டார். பி.டி. நகர் சாலையில் இருந்த இஸ்லாமியர்கள் அண்ணாமலையிடம் புறா, லவ் பேர்ட்ஸ்களை பறக்க விடுமாறு வழங்கினார். பின்னர் குழாய் மூலம் பன்னீரை பீச்சி அடித்தனர்.
முனிசாலை பகுதியில் மதுரை தெற்கு மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தினர் சிலர் அண்ணாமலையுடன் சேர்ந்து நடந்து சென்றனர். இந்த யாத்திரையின் போது தமக்கு சால்வை, மாலைகள் அணிவிப்பதற்குப் பதிலாக ஏழைகளுக்கு உணவு வழங்குவமாறு அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments