செந்தில் பாலாஜி தொடர்புடைய 9 இடங்களில் ரூ.22 லட்சம் பணம், ரூ.16.6 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் : அமலாக்கத்துறை

0 1818

செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் கடந்த 3ஆம் தேதியன்று நடைபெற்ற சோதனையில் 22 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் 16 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், வேடசந்தூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான வீரா சாமிநாதன் தொடர்புடைய இடங்களில் நடத்திய சோதனையில், சாமிநாதனுக்கு அவரது உறவினர் சாந்தி பினாமியாக செயல்பட்டது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சாந்தியின் கார் ஓட்டுநர் வீட்டில் நடத்திய சோதனையில் 22 லட்ச ரூபாய் பணம், கணக்கில் காட்டப்படாத 16 லட்ச ரூபாய் பொருட்கள் மற்றும் 60 நில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அவை சாமிநாதனுக்கு சொந்தமானவை என தெரியவந்திருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments