முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.. 72 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு.. !!
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. தி.மு.க.வின் 72 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான அடுத்தக்கட்ட பணிகளை தொடங்க வேண்டும் என்றும் வாக்காளர்களின் விவரங்களை சேகரிக்கும் வேலையை ஆரம்பிக்குமாறும் முதலமைச்சர் மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தேர்தலில் முழுமையான வெற்றிப்பெறும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்றும் மாவட்டச் செயலாளர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
Comments