பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறை 5 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடவும் தடை.. நீதிமன்றம்
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசு பொருட்களை கருவூலத்தில் ஒப்படைக்காமல் விற்பனை செய்ததாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிருபிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி, அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தார். இதனால் இம்ரான் கான் தனது எம்.பி. பதவியை இழப்பதுடன், நவம்பர் மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது
Comments