தூத்துக்குடி பனிமய மாதா கோயில் தங்க தேரோட்டம்.. பொதுமக்களால் இழுக்கப்பட்ட திருத்தேர் கோயிலை வலம் வந்தது.. !!
தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கான மக்கள் வடம் பிடித்து இழுக்க பனிமய மாதா தங்கத் தேரோட்டம் நடைபெற்றது.
பசிலிக்கா அந்தஸ்து பெற்ற பனிமய மாதா பேராலயத்தின் திருவிழா ஜூலை 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவா உயர் மறை மாவட்ட பேராயர் பிலிப் நேரி கலந்து கொண்டு சிறப்பு திருப்பலி நடத்திய பின்னர் தேரோட்டம் துவங்கயது.
சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் ஜப்பான் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தங்க இலைகள் மற்றும் அமெரிக்கன் டைமண்ட் ஆகியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த 53 அடி உயர தேர் கோயிலைச் சுற்றி வலம் வந்தது.
Comments