ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சித்துவந்த அலெக்ஸி நவல்னிக்கு 19 ஆண்டுகள் சிறை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஐ.நா. வலியுறுத்தல்
ரஷ்ய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்துவந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு மேலும் 19 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நிதி மோசடி வழக்கில் பதினொன்றரை ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அரசுக்கு எதிராக கிளர்ச்சியை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டி, மேலும் 19 ஆண்டுகள் தண்டனை விதித்து ரஷ்ய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதனை கடுமையாக கண்டித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறித்தியுள்ளது.
Comments