தண்ணீர் இல்லாமல் சுமார் 6,000 ஏக்கர் நெல் பயிர்கள் கருகும் நிலை.. உரிய ஆய்வு நடத்தி நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
திருவாரூர் மாவட்டத்தின் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காததால் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ஜூன் 12 ஆம் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 80 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடைமடை பகுதியான கருப்புக்கிளார் உள்ளிட்ட பகுதிகளுக்கு முறையாக தண்ணீர் கிடைக்காததால் பயிர்கள் கருகி வருவதாகவும் எனவே உரிய ஆய்வு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
Comments