திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் கோபுரத்தின் ஒருபகுதி திடீரென இடிந்து விழுந்தது..!
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தில் உள்ள நிலைகளில் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன.
அருகிலேயே பள்ளிகள் இருக்கும் நிலையில் நள்ளிரவில் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு, கான்கிரீட் பூச்சு விழும் நிலையில் இருந்ததால், பலகை, கம்புகளைக் கொண்டு முட்டுக் கொடுக்கப்பட்டு இருந்தது.
கோபுரத்தை சீரமைக்கவும், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஒருவேளை டெண்டர் எடுக்க யாரும் முன்வரவில்லை யென்றால் கோயில் நிர்வாகமே பணிகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments