முறுக்கு முறுக்குன்னு முறுக்கி வண்டியை பறி கொடுத்த தம்பி இறுதியில் போலீசுக்கு டுவிஸ்ட் ..! ஓவர் ஆட்டம் உடம்புக்கு ஆகாதுப்பா

0 1834

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளன்று பேரணியாக சென்ற போது போக்குவரத்து விதிகளை மீறி கார்கள் மற்றும் பைக்குகளில் அட்ராசிட்டி செய்த இளைஞர்களை வாகன பதிவெண் கொண்டு போலீசார் அடையாளம் காணும் முயற்சியில் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கும்பலா போகும் போது தப்பு செஞ்சா போலீஸ் கண்டுக்க மாட்டாங்கன்னு வண்டியை முறுக்கி கடுப்பேத்திய தம்பியை போலீசார் சுத்துப்போட்ட காட்சிகள் தான் இவை..!

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடா நிலையில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவிடத்திற்கு சென்ற கார் மற்றும் பைக்குகளில் பேரணியாக சென்ற இளைஞர்களில் சிலர் தாங்கள் ஓட்டி வந்த இரு சக்கர வாகனங்களை முறுக்கிக் கொண்டு சென்றனர்.

கார்களின் வெளியே தொங்கிக் கொண்டும், ஆம்புலன்ஸில் கொடி கட்டியவாறும் சாரை சாரையாக சென்றனர்.

இரு சக்கர வாகனம் மற்றும் கார்களில் போக்குவரத்து விதிகளை மீறிச்செல்லும் நபர்களை போலீசார் காமிராவுடன் நின்று கண்காணித்து ஒழுங்குப்படுத்தி அனுப்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களில் சிலர் பைக்கில் ஆக்சிலேட்டரை முறுக்கு முறுக்கு என்று திருக்கியதால் போலீசார் எரிச்சல் அடைந்தனர்

போலீசார் எச்சரித்தும் கேட்காத அந்த இளைஞர் டி.எஸ்.பியை ஆத்திரம் கொள்ளச்செய்வதற்காக பைக்கை முருக்கிக்கொண்டே நின்றார். விரைந்து வந்த அவர் பைக்கின் சாவியை எடுத்துக் கொண்டதோடு பைக்கை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்

அந்த இளைஞரை ரவுண்டு கட்டிய போலீசார் கொடுத்த சவுண்டில் அந்த இளைஞர் கரண்டில் கைவைத்தது போல அதிர்ச்சியுடன் பைக்கில் இருந்து இறங்கினார்

பைக் பறிமுதல் செய்து ஓரங்கட்டப்பட்ட நிலையில் அதுவரை கெத்தாக உணர்ந்த அந்த இளைஞர் பைக்கை பறி கொடுத்து விட்டு வெத்தாக நின்றார்

அப்போது காரில் அங்கு வந்த அமைப்பு நிர்வாகி ஒருவர் போலீசாரிடம் கையெடுத்து கும்பிட்டு அந்த இளைஞர் சார்பாக மன்னிப்புக்கேட்டதால், போலீசார் மனமிறங்கி சாவியை கொடுத்தனுப்பினர்

மீண்டும் பைக்கில் ஏறிய அந்த இளைஞர் பவ்யமாக போலீசார் நிற்கும் பகுதியை கடந்து கும்பலாக சென்றதும் முறுக்கிக் கொண்டு சென்றார்

இதற்கிடையே அமைதியை சீர்குலைக்கும் வகையில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களை தாங்கள் பதிவு செய்த வீடியோ காட்சிகளின் அடைப்படையில் அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments