ரசிகர்களுக்கு விலை உயர்ந்த 6 செவ்ரோலேட், மெர்சிடிஸ்-பென்ஸ் கார்கள் குலுக்கல் முறையில் வழங்கும் ஹாலிவுட் ஹீரோ

0 1601

அயர்ன் மேன் திரைப்படத்தின் கதாநாயகன் ராபர்ட் டவுனி ஜூனியர், தனது குடும்பத்திற்கு சொந்தமான 6 பழைய மாடல் கார்களை குலுக்கல் முறையில் ரசிகர்களுக்கு கொடுப்பதாக கூறியுள்ளார். 

சமூக வலைதளத்தில்,  6 கார்களின் படங்களை வெளியிட்டு அதில் ஒரு காரில் அவரே உட்கார்ந்து இருப்பதை பகிர்ந்துள்ளார். 1965 மற்றும் 1985 ஆண்டுகளுக்கு இடையே வாங்கப்பட்ட செவ்ரோலேட், மெர்சிடிஸ்-பென்ஸ் என  விலை உயர்ந்த கார்களை தமது அறக்கட்டளை மூலம் ரசிகர்களுக்கு கொடுக்க அவர் முன்வந்துள்ளார்.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா நாடுகளை சேர்ந்த 18 வயது நிரம்பிய ரசிகர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments