"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
குடிநீர் குழாயில் பூரான் வந்ததால் கிராம மக்கள் அச்சம்.. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி முறையான பராமரிப்பு இல்லை என புகார்.. !!
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மேல்நீலை நீர்த்தொக்கத் தொட்டியில் இருந்து வந்த தண்ணீரில், இறந்த நிலையில் பூரான் வந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.
குளக்குடி என்ற அந்த கிராமத்தில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டி 2002ஆம் ஆண்டு கட்டப்பட்டு, பத்து ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது.
அதன்பிறகு சரியான பராமரிப்பு இல்லாததால் தொட்டி பழுதடைந்து ஆங்காங்கே விரிசல்களும், சிமெண்ட் பூச்சு உடைந்து கம்பிகள் வெளியே தெரிவதால் எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என அச்சம் நிலவுகிறது.
இந்த நிலையில் தொட்டிக்குள் பூரான், தவளை போன்றவை இருப்பதாகவும், இதனால் நோய் பரவும் அச்சம் இருப்பதாகவும் மக்கள் கூறியுள்ளனர்.
Comments