ஜிம்பாடி... ஆணழகன் வயசு 30 தான் ஆச்சி ..! நடிகையின் கணவர் பலி..! உயிரிழப்புக்கு என்ன காரணம் ?

0 4199

சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வரும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையின் கணவர் இரவில் மூச்சுத்திணறல் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். தினமும் உடற்பயிற்சி செய்து ஆணழகன் பட்டம் பெறும் வகையில் உடலை கட்டுமஸ்தாக வைத்திருந்தவருக்கு நேர்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு 

நீங்க நம்பலைன்னாலும் இது தான் நெசம்.....இவர் தான் திடீரென்று உயிரிழந்த 30 வயது ஆணழகன் அரவிந்த்சேகர்..!

தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நாதஸ்வரம் சீரியல் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா.

தொடர்ந்து கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா, வாணி ராணி உள்ளிட்ட தொடர்களில் மக்கள் மத்தியில் பிரபலமான ஸ்ருதி. கடந்தாண்டு ஜிம் பயிற்சியாளரான அரவிந்த் சேகரை இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு சைதாப்பேட்டையில் வசித்து வந்தார்

பிட்னஸில் ஆர்வம் கொண்டவரான அரவிந்த் சேகர் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்ட நிலையில், மிஸ்டர் தமிழ்நாடு 2022 பட்டம் வென்றார்

ஸ்ருதியும், அரவிந்தும் சேர்ந்து குறும்பாக ரீல்ஸ் செய்து இன்ஸ்டாவில் வெளியிடும் வீடியோக்களுக்கு வரவேற்பு அதிகம்

யார் கண்பட்டதோ தெரியவில்லை யாரும் எதிர்பார்க்காத அந்த நிகழ்வு கடந்த 2ஆம் தேதி இரவு அரங்கேறியது. வீட்டில் இருந்த போது சுமார் இரவு 11.30 மணியளவில் அரவிந்த் சேகருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

உடனே மனைவி ஸ்ருதி, அரவிந்த் சேகரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்துள்ளார், அங்கு சிகிச்சை பலனின்றி அரவிந்த் சேகர் உயிர் இழந்தார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அரவிந்த் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது இறுதி சடங்குகள் முடிந்த நிலையில் சின்னத்திரை நடிகை ஸ்ருதிக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்ருதி சண்முகப்பிரியா இண்ஸ்டாவில் தனது கணவரின் புகைப்படத்துடன் உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உன் உடல் மட்டும் தான் என்னைவிட்டு பிரிந்து சென்றுள்ளது...
ஆனால் உன்னுடைய ஆன்மாவும், மனமும் எப்போதுமே என்னுடனே இருக்கிறது...
என் காதலே. உன் மேல் உள்ள காதல் இப்போது தான் மேலும் மேலும் அதிகரிக்க தொடங்கி உள்ளது..
மிஸ் யூ... நீ என் அருகில் இருப்பது போல உணர்கிறேன்.....என உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

திருமணமான 1 வருடத்திலே கணவரை இழந்து தவிக்கும் நடிகை ஸ்ருதிக்கு சமூக வலைதளத்தில் அனுதாபவங்களை தெரிவித்து வரும் நிலையில், 1 மாதத்திற்கு முன்பு அரவிந்த் சேகர் இன்ஸ்டாவில் பதிவிட்ட வீடியோ ஒன்றில்,
நல்ல நினைவுகளோடு இறக்க வேண்டும் ....
நிறைவேறாத கனவுகளோடு அல்ல...
என உருக்கமாக அரவிந்த் பதிவிட்டிருந்ததை சோகத்துடன் பகிருந்து வருகின்றனர்.

அதே நேரத்தில் கட்டுமஸ்தான உடல் அழகு வேண்டும் என்பதற்காக , இளைஞர்கள் ஸ்டீராய்டு போன்ற மருந்துகளை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments