திருவள்ளூர் தேரடியில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த திருடனை.. வீட்டிற்குள் பூட்டி வைத்து போலீசாரிடம் ஒப்படைத்த ஊர் மக்கள்

0 1299


திருவள்ளூரில் பட்டப்பகலில் ஆளில்லாத வீட்டிற்குள் புகுந்து, மர பீரோவை கடப்பாரையால் உடைத்து கொண்டிருந்த திருடன் சுற்றிவளைக்கப்பட்டான். தேரடி-கனகவல்லிபுரம் தெருவில் உள்ள கிருபாகரன் என்ற முதியவரது வீட்டில் இந்த கைவரிசை நடந்துள்ளது.

கிருபாகரன் வீட்டில் இல்லாத நேரத்தில், உள்ளே யாரோ உடைக்கும் சத்தம் கேட்டதால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன், மேல்தளத்தில் வசிக்கும் அவரது மருமகள்கள் சத்தமில்லாமல், வெளிப்பக்கக் கதவைப் பூட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், அந்த திருடனை கையும் களவுமாக கைது செய்தனர்.

விசாரணையில், அவர் பெயர் அரவிந்தன் என்பதும், அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதும், சில நாட்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து ஜாமீனில் வந்ததும் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments