ஆடித் திருவிழாவையொட்டி கோயில்களில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
ஆடித்திருவிழாவையொட்டி புதுக்கோட்டை அருகே பக்தர்கள், தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடனை செலுத்தினர். செல்லுகுடி வீரலட்சுமி அம்மன் கோயிலில் பெண்கள் முளைப்பாரியுடன் அம்மன் வீதி உலா நடைபெற்றது. பிறகு வரிசையாக அமர்ந்த பக்தர்களின் தலையில் பூசாரி தேங்காய்களை உடைத்தார்.
இதேபோல கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கை யொட்டி விரதமிருந்த பக்தர்கள், தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் சாணர்பட்டி அருகே ஆண்டியப்பட்டி மகாலாட்சுமி அம்மன் கோயிலில் ஆணி செருப்பை அணிந்தபடி வலம் வந்த பூசாரி, விரதம் இருந்தவர்களை சவுக்கால் அடித்தும், தலையில் தேங்காய் உடைத்தும் அவர்களின் நேர்த்திக்கடனை பூர்த்தி செய்தார்.
Comments