ஞானவாபி மசூதிக்குள் தொல்லியல் துறையினர் அறிவியல் பூர்வ ஆய்வு.. அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதியைத் தொடர்ந்து ஆய்வு.. !!
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலையொட்டி அமைந்துள்ள ஞானவாபி மசூதிக்குள், தொல்லியல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் அறிவியல்பூர்வ ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.
உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில், மசூதியில் உள்ள வசுகானா குளம் சீலிடப்பட்டிருப்பதால், அதைத்தவிர மற்ற இடங்களில் ஆய்வு நடந்து வருகிறது.
ஞானவாபி மசூதி அமைந்துள்ள இடத்தில், இந்து கோயில் இருந்ததா என்பதைக் கண்டறிய, ஆய்வு நடத்த உத்தரவிடக் கோரி, நான்கு பெண்கள் தொடர்ந்த வழக்கில், வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதையெதிர்த்து மசூதி நிர்வாகக் குழுவினர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றமும், கீழமை நீதிமன்ற அனுமதியை உறுதி செய்தது. இதைத் தொடர்ந்தே தற்போது ஆய்வு நடக்கிறது.
Comments