கொலம்பியாவில் 60 ஆண்டு உள்நாட்டு சண்டையை 6 மாதம் நிறுத்த ஒப்பந்தம்
60 ஆண்டுகளில் நான்கரை லட்சம் பேரை பலி கொண்ட கொலம்பிய அரசுக்கும், அந்நாட்டில் இயங்கிவரும் தீவிர இடதுசாரி போராளிக் குழுவிற்கும் இடையேயான சண்டையை, 6 மாதம் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அறுபதுகளில் தீவிர இடதுசாரி சிந்தனையாளர்களால் தொடங்கப்பட்ட நேஷனல் லிபரேஷன் ஆர்மி ((National Liberation Army)) என்ற போராளிக் குழுவிற்கும், கொலம்பிய அரசுக்கும், போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது.
இதில் இதுவரை 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சண்டைக்கு முடிவு கட்ட கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ விடுத்த அழைப்பை ஏற்று இடைக்காலப் போர் நிறுத்தத்திற்கு போராளிக்குழு ஒப்புக்கொண்டது.
Comments