மாநிலங்களவையில் மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து காரசாரமான விவாதங்களுக்கு மத்தியில் மெல்லிய நகைச்சுவை

0 1858

மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து காரசாரமான விவாதங்களுக்கு மத்தியில் மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் அவைத் தலைவர் ஜக்தீப் தன்காரும் பேசிய கலகலப்பான உரையாடல் அவையில் உள்ள எம்பிக்களை குபீர் சிரிப்புகளுக்கு ஆளாக்கியது.

எதிர்க்கட்சியினர் மீது அவைத் தலைவர் கோபமாக இருப்பது போல் தெரிகிறது என்று மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.பேச அனுமதித்து பேசத் தொடங்கியதும் இரண்டே நிமிடங்களில் அமரச் சொல்கிறீர்கள், இது மீண்டும் மீண்டும் நடப்பது ஏன் என்று தெரியவில்லை என்று கோபத்துடன் கார்கே கூறியதற்கு தன்கர் நகைச்சுவையாக பதிலளித்தார் .

தமக்கு திருமணமாகி 45 ஆண்டுகள்ஆகி விட்டதால் இனி கோபமே வராது என்று தன்கார் கூறியபோது உறுப்பினர்கள் கைதட்டி சிரிப்பலைகளை வாரி வழங்கினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments