அழுவதில் நடிகையர் திலகமப்பா.. அகப்பட்டதால் ஆயுள் கைதியப்பா.. மொத்த வித்தையும் வீணான தருணம்..!

0 2349

காதலனுடன் சேர்ந்து கட்டுமான அதிபரான கணவனை கொன்று புதைத்த வழக்கில் அழுது புரண்டு நாடகம் போட்ட பெண் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது

குழிதோண்டி புதைக்கப்பட்ட கணவன் சடலம் மீட்கப்பட்டதும் தன்னால் நிற்க கூட இயலாத படி கண்ணீர் விட்டு கதறி அழுத.. இந்த நடிகையர் திலகத்துக்குத்தான் ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது

புதுச்சேரி மாநிலம் பூமியான்பேட்டை ராகவேந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த கட்டுமான அதிபர் விவேக்பிரசாத். இவரது மனைவி ஜெயதி பிரசாத். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள்.

கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் புதுச்சேரி அருகேயுள்ள பூத்துறை பகுதியில் கட்டடப்பணியை பார்க்கச் சென்ற விவேக்பிரசாத் வீடு திருப்பவில்லை. தனது கணவர் மாயமானதாக ஜெயதி ரெட்டியார் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சில தினங்களில் அவரை கொலை செய்து புதைத்தது அவரிடம் ஓட்டுனராக வேலைப்பார்த்து வந்த பாபு என்கிற ஷேக் பீர் முகம்மது என்பது தெரியவந்தது.

அவன் அடையாளம் காட்டிய இடத்தில் இருந்து விவேக் பிரசாத்தின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. அப்போது தனது கணவர் பிரிவை தாங்க இயலாமல் விக்கித்து தடுமாறியபடி நின்ற ஜெயதி கதறி அழுதார்

அபோதைய காவல் ஆய்வாளர் தங்கமணி நடத்திய விசாரணையில் கார் ஓட்டுனர் பாபுவுக்கு விவேக் பிரசாத்தின் மனைவி ஜெயதிக்கும் தகாத உறவு இருந்து வந்ததை செல்போன் தொடர்புகள் மூலம் விவேக் பிரசாத் தெரிந்து கொண்டதால், அவரை இரு வரும் சேர்ந்து திட்டம் தீட்டி தீர்த்துக்கட்டியது அமபலமானது. இந்த கொலை வழக்கில் கதறி அழுது நாடகம் போட்ட ஜெயதியும் கைது செய்யப்பட்டார்

காதலன் சேக் பீர் முகமது , ஜெயதி ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை புதுச்சேரி தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது வழக்கு விசாரணை முடிந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட சேக் பீர் முகமதுவுக்கும் ஜெயதிக்கும் ஆயுள் தண்டனையும் , அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கிற்கு தேவையான ஆதாரங்கள மற்றும் சாட்சியங்களை பாதுகாத்து வழக்கை திறம்பட நடத்தி கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுத்த போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments