இளையராஜா பெரும்பான்மை யுவன்சங்கர் ராஜா சிறுபான்மையா ? சீமான் சீற்றம் காட்டிய பின்னணி.. செருப்பால் அடிப்பேன் என்றதால் பரபரப்பு

0 2438

தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தமிழர்கள் என்றும் பெருபான்மை தேசிய இனத்தின் பிள்ளைகள் என்றும் அவர்களை சிறுபான்மையினர் என்று சொல்பவர்களை செருப்பால் அடிப்பேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்

சென்னை கிண்டியில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் சிலைக்கு மாலை அணிவித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் குறித்து தான் தெரிவித்த சர்ச்சைக்குறிய கருத்துக்கு குர் ஆனை மேற்கோள் காட்டி பேசினார்.

தமிழகத்தில் வாழுகின்ற இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்கள் தமிழர்கள் என்றும், பெரும்பான்மை தேசிய இனத்தின் பிள்ளைகள் என்றும் தெரிவித்தார்

மதத்தின் அடைப்படையில் மனிதர்களின் எண்ணிக்கையை கணக்கிடக்கூடாது என்றும் மொழி மற்றும் இனத்தின் அடிப்படையில் தான் கணக்கிட வேண்டும் என்று சொன்ன சீமான் இளையராஜா பெருபான்மை, இஸ்லாத்தை தழுவிய தம்பி யுவன் சங்கர் ராஜா சிறுபான்மையா ? திலீப்பாக இருக்கும் போது பெரும்பான்மை, ஏ.ஆர். ரஹ்மானாக மாறியதும் சிறுபான்மையா ? இது என்ன உலக பைத்தியக்காரத்தனம் என்று கேள்வி எழுப்பினார்

ஒரு கட்டத்தில் சிறுபான்மை குறித்த கேள்வியால் உக்கிரமான சீமான், இனி அவர்களை யாராவது சிறுபான்மை என்று குறிப்பிட்டு அழைத்தால் செருப்பால் அடிப்பேன் என்று குனிந்து செருப்பை எடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments