ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து ஆத்தூர் விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்க கோரி கடையை அடைத்து வியாபாரிகள் போராட்டம்.. !!
திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூர் பகுதிக்கு, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறந்து விட கோரி வியாபாரிகள் கடையை அடைத்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த அணைக்கட்டில் இருந்து தென்கால் பாசனம் மூலம் ஆத்தூரில், வாழை மற்றும் வெற்றிலை பயிரிடப்படுகிறது.
வேளாண்மைக்கும், கால்நடைகளின் தேவைக்காகவும் தண்ணீர் திறக்க வலியுறுத்தி, ஆத்தூர் பேருந்து நிலையம் முன்பு, வியாபாரிகள், விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
இவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய நீண்ட நேர பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என அதிகாரிகள் கூறியதால், நாளை சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள், வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments