இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றம்.. ஃபாக்ஸ்கான் பற்றிய ட்வீட்டை முதலமைச்சர் நீக்கிய மர்மம் என்ன..? - இ.பி.எஸ். கேள்வி
அ.தி.மு.க. ஆட்சியில் அன்னிய நேரடி முதலீடு ஈர்த்தலில் 3-ஆவது இடத்தில் இருந்த தமிழகத்தை 8-ஆவது இடத்திற்கு தள்ளியதுதான் தற்போதைய முதலமைச்சரின் சாதனை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், அ.தி.மு.க. அரசில் 2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறே மாதங்களில் தமிழகத்திற்கு 1 லட்சத்து 97,582 கோடி ரூபாய் அன்னிய முதலீடு வந்ததாக கூறியுள்ளார்.
கடந்த 31-ஆம் தேதி ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் மொபைல் உதிரி பாகத் தயாரிப்பு ஆலை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டதாக வெளியிட்ட ட்வீட்டை ஃபாக்ஸ்கான் சார்பில் மறுப்பு செய்தி வந்தவுடன் முதலமைச்சர் நீக்கிய இருப்பதாகவும், அதன் மர்மத்தை முதலமைச்சர் தான் தமிழக மக்களிடம் விளக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஃபாக்ஸ்கான் நிறுவனம் தனது தொழிற்சாலைகளை கர்நாடகாவிற்கும் தெலுங்கானாவிற்கும் மாற்றியது வேலை வாய்ப்புக்காக காத்திருந்த தமிழக இளைஞர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2024 ஜனவரி முதல் வாரம் நடத்த உள்ள உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டிலாவது தமிழக மக்களின் நலனுக்கான திட்டங்களையும் முதலீடுகளையும் ஈர்க்க வேண்டும் என்று இ.பி.எஸ். வலியுறுத்தியுள்ளார்.
Comments