ஹீரோ மோட்டோகார்ப் தலைவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் செல்ஃபோன்களை கைப்பற்றினர்
அந்நியச் செலாவணி முறைகேடு புகாரில் பேரில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன தலைவர் பவன் காந்த் முஞ்சால் தொடர்புடைய 11 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
பல்வேறு நாடுகளுக்கு 54 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் அனுப்பப்பட்டதாகவும், இந்த நிதி முஞ்சாலின் தனிப்பட்ட செலவுகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டெல்லி, குருகிராம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சோதனையில், 25 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள், தங்க, வைர நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், முக்கிய ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் செல்ஃபோன்களை கைப்பற்றியுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.
Comments