இந்தியா-பாகிஸ்தான் நேரடி பேச்சுவார்த்தைக்கு ஆதரவளிக்க தயார் - அமெரிக்கா
இந்தியா - பாகிஸ்தான் நேரடி பேச்சுவார்த்தைக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது முதல் இந்தியா - பாகிஸ்தான் உறவில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில், இரு நாடுகள் இடையே உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் 2 தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதே அமெரிக்காவின் நீண்ட கால விருப்பம் என்றார்.
ஆனால், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் முழுமையாக கைவிடும் வரை, சுமூகமான உறவு சாத்தியமல்ல என்று இந்தியா கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
Comments