பன் பட்டர் ஜாம் வாங்குறீங்களா...? இதனை முதலில் கவனியுங்கள்..! அதிகாரியின் அட்வைஸ்...!!
கடைகளில் பன் பட்டர் ஜாம் வாங்கும் போது அதனை முதலில் முகர்ந்து பார்த்து பரிசோதித்து விட்டு கெடாமல் இருந்தால் மட்டுமே வாங்கி உண்ண வேண்டுமென உணவு பாதுகாப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பேக்கரிகள் முதல் சாதாரண கடைகள் வரையிலும், ஏன்.. தள்ளுவண்டிகளிலும் கூட தற்போது பன் பட்டர் ஜாம் வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை சாப்பிட்ட சிலர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
பன் பட்டர் ஜாமை எவ்வாறு தேர்வு செய்து வாங்குவது என விளக்கம் அளித்துள்ளார் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்.
முகர்ந்து பார்த்தே பன்னின் தன்மையை தெரிந்துக் கொள்ளலாம் என்பதற்கும் டிப்ஸ் வழங்கி உள்ளார், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி.
Comments