ஜெயிலருக்கு எதிராக தர்ணா செய்த கைதி நிர்வாண சித்ரவதை..! கதறலுக்கு காரணம் இது தான்...

0 2372

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி ஒருவர் ஜெயிலில் சாராயம் காய்ச்சும் நோக்கில், ஊறல் வைத்ததாக சிக்கிய நிலையில் தன்னை சிறை அதிகாரி நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்வதாக நீதிமன்ற வளாகத்தில் அமர்ந்து கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தன்னை சிறையில் வைத்து நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்வதாக தரையில் அமர்ந்து தர்ணா செய்யும் இவர் தான் சிறையில் சாராயம் காய்ப்பதற்கு ஊறல் போட்ட புகாருக்குள்ளான மாங்காய் பிரபு..!

சேலம் சிறைவளாகத்தில் பாட்டிலில் சாராய ஊரல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மாங்காய் பிரபுவிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் கொலை வழக்கில் சிக்கி ஆயுள் தண்டனை பெற்ற இவர் , சாராய ஊறலுக்கு

தன்னைபொறுப்பேற்க வேண்டும் என அதிகாரிகள் அடித்து நீதிமன்றவளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

சிறைக்குள் செல்போன் மற்றும் சார்ஜர் போன்றவற்றை புதைத்து வைத்து பயன்படுத்துவதாகவும், இதனை சொன்னால் தங்கள் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ஜெயிலருக்கு பயந்து மாங்காய் பிரபு கூட்டாளிகள் கதறிய நிலையில் போலீசார் அவர்களை அங்கிருந்து அழைத்துச்சென்றனர். மாங்காய் பிரபு உள்ளிட்ட கூட்டாளிகளை வீராணம் கொலை வழக்கு தொடர்பான சேலம் நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு அழைத்து வந்த போது அவர்கள் இது போல கதறும் நிலைக்கு தள்ளப்பட்டது குறிப்பிடதக்கது.

இரு கொலை வழக்குகளில் தொடர்புடைய கைதி தன்னை கொல்லப்பார்ப்பதாக கூறி சிறைவளாகத்தில் பகிரங்கமாக தர்ணா செய்த நிலையில் அவரை அங்கிருந்து அழைத்துச்செல்ல பாதுகாப்பு போலீசார் உடனடி நடவடிக்கை ஏதும் மேற்கொள்ள வில்லை என்பது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments