பெய்ஜிங் நகரில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொட்டித் தீர்த்த கனமழை..!
சீன தலைநகர் பெய்ஜிங்கில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை கொட்டித் தீர்த்தது.
கடந்த 1891ம் ஆண்டுக்குப் பிறகு பெய்ஜிங் நகரமே வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை 29 அங்குலத்திற்கு மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டோக்சுரி புயல் காரணமாக இந்த மழை பெய்துள்ளதாகவும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெய்ஜிங் நகரில் இருந்து 31 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் மாயமானவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்துமாறு மீட்புப் படையினருக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
Comments