வாடிக்கையாளர் பெயரில் கிரெடிட் கார்டை வாங்கி ரூ.7.58 லட்சம் மோசடி.. ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் ஊழியர் கைது.. !!

0 4908

சென்னையில் வாடிக்கையாளர் பெயரில் கிரெடிட் கார்டை வாங்கி, மோசடி செய்ததாக ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது பெயரில் கடன் அட்டையைப் பெற்று, அதன்மூலமாக அமேசான் இணையதளத்தில், 7 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய்க்கு, யாரோ பொருட்களை வாங்கியிருப்பதாக கவுதமி என்பவர், ஆவடி மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.

அதில், தனது ஐசிஐசிஐ வங்கிக் கணக்கில், தனது மொபைல் எண், இ-மெயில் முகவரியும் மாற்றப்பட்டிருப்பதாக அவர் கூறியிருந்தார்.

அதன்பேரில் விசாரித்த மத்திய குற்றப்பிரிவுப் போலீசார், மோசடியில் ஈடுபட்டதாக, அந்த வங்கியின் முன்னாள் ஊழியரான சைதாப்பேட்டையைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments