அரசுப் பள்ளி மாணவர்களின் திறனைக் கண்டறிந்து ஊக்குவிக்க திறனாய்வுத் தேர்வு.. ஆக.,7 முதல் விண்ணப்பிக்கலாம்.. !!
அரசுப் பள்ளி மாணவர்களின் திறனைக் கண்டறிந்து ஊக்குவிக்க, நடப்புக் கல்வியாண்டு முதல் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு என்ற பெயரில், நடத்தப்படும் இந்த தேர்வுக்கு, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இதில், 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, இளநிலைப் பட்டப் படிப்பை முடிக்கும் வரை, ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கான கேள்விகள், 9 மற்றும் 10ம் வகுப்புகளின் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்து தலா 60 கேள்விகள் கொண்ட இருதாள்களாக இடம்பெறும்.
இந்த தேர்வு, வரும் 18 ஆம் தேதியும், செப்டம்பர் 23 ஆம் தேதியும் நடத்தப்பட உள்ளது. காலையில் முதல்தாள், பிற்பகலில் இரண்டாம் தாள் தேர்வும் நடத்தப்பட இருக்கிறது.
விண்ணப்பங்களை வரும் 7 ஆம் தேதி முதல், 18 ஆம் தேதி வரை, இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து 50 ரூபாய் கட்டணத்துடன் பள்ளி தலைமையாசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments