நீண்ட வரிசையில் காத்திருந்து தக்காளியை வாங்கிச் சென்ற பொதுமக்கள்.. இந்த விலை விற்றால் எப்படி குடும்பம் நடத்துவது என பெண்கள் கேள்வி
நியாய விலைக் கடைகளில் இன்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தக்காளியை வாங்கிச் சென்றனர்.
சென்னையில் ஒரு கிலோ தக்காளி வாங்கிச் செல்வதற்காக காலை 7 மணியில் இருந்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக பெண்கள் பலர் தெரிவித்தனர்.
தக்காளியையே இவ்வளவு விலை கொடுத்து வாங்கினால் எப்படி வாடகை கொடுப்பது, பிள்ளைகளை படிக்க வைப்பது, குடும்பம் நடத்துவது என்றும் பெண்கள் கேள்வி எழுப்பினர்.
நீண்ட வரிசை இருப்பதை பார்த்த பொதுமக்களில் சிலர், ஒரு கிலோ தக்காளி போடுவதற்கு பதில் எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் அரை, அரை கிலோவாக போடலாமே என்று நியாய விலைக்கடை ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, அரசு ஒரு கிலோ தான் போடச் சொல்லி இருக்கிறிது என்று ஊழியர்கள் பதிலளித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
Comments