பெண்கள் வளம்பெறும் போது உலகமும் செழிக்கும் - பிரதமர் நரேந்திர மோடி
பெண்களுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சி வேகமடையும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பாக குஜராத் தலைநகர் காந்தி நகரில் நடைபெற்ற ஜி20 அமைச்சர்கள் மாநாட்டில் காணொலி வாயிலாக பிரதமர் உரையாற்றினார். அப்போது, நாட்டின் உள்ளாட்சிப் பொறுப்புகளில் 46% பெண்களே உள்ளதாகவும், ஆண்களை விட பெண்களே அதிகளவில் உயர்கல்வி பயில்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
சந்திரயான், ககன்யான், மங்கள்யான் போன்ற முதன்மையான விண்வெளித் திட்டங்களில் பெண் விஞ்ஞானிகளின் கடின உழைப்பும், திறமையும் பெரும் பங்களிப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை வழிநடத்தும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பெண்களுக்கு முன்மாதிரியாக திகழ்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெண்கள் வளம்பெறும் போது உலகமும் செழிக்கும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Comments