உச்சநீதிமன்றத்தில் மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக விசாரணை.. 118 உடல்கள் அடையாளம் காணப்படாமல் பிணவறையில் உள்ளதாக அரசு விளக்கம்..!
மணிப்பூர் கலவரம் தொடர்பான விசாரணையை உச்சநீதிமன்றம் மேற்கொண்டுள்ள நிலையில் கலவரத்தில் உயிரிழந்த 118 பேரின் உடல்கள் யாராலும் உரிமை கோரப்படாமல் இம்பாலில் உள்ள பிணவறைகளில் கடந்த ஒருமாதமாக வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களில் பெரும்பாலோர் எல்லைத் தாண்டி ஊடுருவியவர்கள் என்றும் மத்திய அரசுத் தரப்பு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இவர்கள் குறிப்பிட்ட திட்டத்துடன் ஊடுருவல் செய்து கொல்லப்பட்டதாகவும் அரசுத் தலைமை வழக்கறிஞர் துஷார் மெஹ்தா தமது மனுவில் விளக்கியுள்ளார்.இதைப் பற்றி மேற்கொண்டு விளக்கம் தர முடியாது என்றும் பிரச்சினையை மேலும் சிக்கலாக்க விரும்பவில்லை என்றும் துஷார் மெஹ்தா குறிப்பிட்டுள்ளார். அடையாளம் தெரியாத உடல்களை பல மாதங்களாகப் பராமரிக்க முடியாது என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments