கொசுக்கு புகை போட்டதை தட்டி கேட்டதால் தகராறு.. கார் ஓட்டுநருடன் பல் மருத்துவர் கட்டிப்புரண்டு சண்டை..!

0 2606

சென்னை தி நகரில் பிரபல நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரின் கார் ஓட்டுநருக்கும், பல் மருத்துவருக்கும் ஏற்பட்ட தகராறில் காரின் கண்ணாடி உடைத்து சேதப்படுத்தப்பட்டது.

சென்னை நந்தனத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரின் பென்ஸ் காரில் அவரது குடும்பத்தார் தி நகரில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கில் சந்தானம் நடித்து வெளிவந்துள்ள திரைப்படத்தை பார்க்க சென்றுள்ளனர்.

அவர்களை இறக்கி விட்டு விட்டு காரை பார்க்கிங் செய்த இடத்தில்,போதையில் இருந்த பல் மருத்துவர் மனோஜ் என்பவர் கொசுவுக்காக புகை போடவே, அதற்கு ஓட்டுநர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த தகராறில் கீழே விழுந்து காயமடைந்த பல் மருத்துவர், காரின் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கியதாக கூறப்படுகிறது . இதையடுத்து அங்கு வந்த போலீசார் மருத்துவரை பிடித்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments