2 சர்வதேச போதைப் பொருள் கடத்தல் முயற்சிகள் முறியடிப்பு.. கண்டுபிடித்த அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு..!
போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ் இரண்டு சர்வதேச போதைப் பொருள் பரிமாற்றத்தைக் கண்டுபிடித்த அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
டார்க் நெட் மூலம் கடத்தலை நடத்த முயற்சித்த 22 பேர் கைது செய்யப்பட்டு கடந்த மூன்றுமாதங்களில் சுமார் 29 ஆயிரத்து 103 எல்எஸ்டி போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க சபதம் எடுத்துள்ள பிரதமர் மோடியின் கொள்கைக்கு இந்த நடவடிக்கை வலிமை சேர்ப்பதாகவும் டிவிட்டரில் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
Comments