தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்களுடன் மக்களவைத் தேர்தல் வியூகம் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை

0 1359

தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்களுடன் இன்று பிரதமர் மோடி மக்களவைத் தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.

முதல் இரண்டு அமர்வுகளில் உத்தரப்பிரதேசம், ஓடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் எம்பிக்களுடன் மோடி கலந்துரையாடி மக்களிடம் நெருங்கிப் பழகுமாறு அறிவுறுத்தினார்.

மூன்றாவது அமர்வாக இன்று உத்தரப்பிரதேசத்தின் காசி,அவாத் மாவட்ட எம்பிக்களை சந்திக்கிறார். தொடர்ந்து நான்காவது அமர்வாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எம்பிக்களை இன்று மோடி சந்திக்க உள்ளார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆந்திரா, கர்நாடகா, அந்தமான் நிகோபர், லட்சத்தீவு தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் கலந்துக் கொள்கின்றனர். மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments