நீங்க அரசாங்கத்த நடத்த நாங்க தான் கெடச்சோமா? டார்கெட் வைத்து போலீஸ் ஃபைன்..! கொந்தளித்த வாடகை கார் ஓட்டுனர்கள்

0 7002

தென்மாவட்டங்களில் டார்கெட் வைத்து போலீசார் அபராதம் விதிப்பதால் தங்களால் வாடகை கார்களை இயக்க முடியவில்லை என்று தெற்கு மண்டல ஐ.ஜியை சந்தித்து ஓட்டுனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆன்லைனில் அபராதம் விதிக்கும் போலீசாரின் டார்கெட் வசூல் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...

தென் மாவட்டங்களில் கடந்த சிலவாரங்களாக போலீசார் டார்க்கெட் வைத்து வாடகை கார்களுக்கு கட்டாய அபராதம் விதித்து கறார் வசூல் செய்வதாக தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க்கிடம் புகார் அளித்த ஓட்டுனர்களின் ஆதங்க குரல் தான் இது..!

மாற்றத்தை நோக்கி டூரிஸ்ட் கேப் என்ற வாடகை வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் மதுரையில் ஐஜி அஸ்ராகார்க்கை சந்தித்து மனு அளித்தனர். கட்டாய அபராதம் விதிப்பது குறித்து உரிய அறிவுறுத்தல்களை காவல்துறையினருக்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மதுரை , ராமநாதபுரம் , சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாடகை வாகன ஓட்டுனர்கள் , வாடிக்கையாளர்களுடன் தங்கள் கார்களில் வெளியூர்களுக்கு சுற்றுலாவுக்கு சவாரிக்கு செல்லும் பொழுது ஒவ்வரு மாவட்டங்களை கடந்து செல்லும் போதும் கண்ணாடியில் ஒட்டப்படும் கூலிங் ஸ்டிக்கருக்காக தலா 1000 ரூபாய் வீதம் போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபடும் காவல்துறையினர் அபராதம் என்ற பெயரில் மாவட்டம் தோறும் வசூல் செய்வதாக தெரிவித்தனர்

தங்களுக்கு மாதத்துக்கு இவ்வளவு அபராதம் வசூலிக்க வேண்டும் என்று டார்கெட் வைத்திருப்பதாக கூறி ஒவ்வொரு மாவட்ட போலீசாரும், வாடகை கார்களுக்கு அபராதம் விதிப்பதாகவும் தெரிவித்தனர்.

சில நேரங்களில் கார் ஓட்டுனருக்கு ஹெல்மெட் அணியவில்லை எனவும், தங்கள் கார் போகாத ஏதோ ஒரு இடத்தில் தாங்கள் விதியை மீறியதாக குறிப்பிட்டும் ஆன்லைன் அபராதம் விதிக்கும் அவலம் நடைபெறுகிறது என்று வேதனையுடன் தெரிவித்ததாகவும், ஐ.ஜி உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்திருப்பதாகவும் கூறினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments