82 வயது மூதாட்டியிடம் நைசாகப் பேசி தங்கச் சங்கிலியைப் பறித்த நபர்.. எதார்த்தமாக கூட அழைத்துச்சென்ற பாவத்துக்காக கைதான நண்பன்..

0 2994

சென்னையில் 82 வயது மூதாட்டியிடம் நைசாகப் பேசி, இரண்டரை சவரன் தங்கச் சங்கிலியை வாங்கிக் கொண்டு தப்பியோடிய நபர் கைது செய்யப்பட்டார்.

அவரை இருசக்கர வாகனத்தில் எதார்த்தமாக அழைத்துச் சென்ற பாவத்துக்காக, அவரது நண்பரும் கைதாகி உள்ளார்.

வடபழநியைச் சேர்ந்த சிவக்குமார், தனது நண்பர் சீனிவாசனை அழைத்துக் கொண்டு அமைந்தகரையில் உள்ள சந்தைக்குச் சென்றார். அங்கு சீனிவாசனை ஒரு இடத்தில் நிற்கச் சொல்லிவிட்டு, கடைவீதியில் மூதாட்டி ஒருவரிடம், தாங்கள் அணிந்துள்ள சங்கிலி பிடித்துள்ளது; அதையொரு படம் பிடித்துக் கொள்ளலாமா என்று கேட்டதாக தெரிகிறது.

அதையும் நம்பி மூதாட்டி செயினைக் கழற்றிக் கொடுக்க, அவரது கவனத்தை திசை திருப்பிவிட்டு, பேருந்தில் ஏறி தப்பிச் சென்றார்.

இதையடுத்து போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது, அடுத்த பேருந்து நிறுத்தத்திலேயே இறங்கி, சீனிவாசனுடன் இருவரும் டூவிலரில் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அடகுக் கடையில் இருந்த சங்கிலியையும் மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments