மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் 8 முதல் 10ஆம் தேதி வரை விவாதம்
மக்களவையில் எதிர்க்கட்சியினர் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் 8-ஆம் தேதி முதல் விவாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ், பி.ஆர்.எஸ். கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் வழங்கி இருந்தனர்.
இதை விவாதத்துக்கு ஏற்பதாக அறிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா, விவாதத்துக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறி இருந்தார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் என மக்களவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் தீர்மானம் மீது ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பதிலளிப்பார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
Comments