பிள்ளைங்க கேட்டத வாங்கி கொடுக்க இயலல.. தமிழர்களை நம்பி வந்தோம்..! ஒரு ஈழ தமிழ் பெண்ணின் கண்ணீர்
இலங்கையில் இருந்து மண்டபம் துறைமுகத்துக்கு இரு குழந்தைகள் மற்றும் கணவனுடன் வந்திறங்கிய ஈழத்தமிழ் பெண் ஒருவர் இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியில் வாழ வழியின்றி தமிழர்களை நம்பி இந்தியா வந்திருப்பதாக வேதனை தெரிவித்தார்.
பிள்ளைங்க ஆசைபட்டு கேட்டத கூட வாங்கி கொடுக்க இயலாத அளவுக்கு இலங்கையில் அரசியல் பொருளாதார சூழல் இருப்பதாக கண்ணீருடன் தமிழர்களை நம்பி வந்துள்ள ஈழத்தமிழ்ப் பெண் இவர் தான்..!
இலங்கை வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்து இறங்கினர் தகவல் அறிந்த மரைன் போலீசார் அவர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
தமிழர்கள் இருக்காங்க என்ற நம்பிக்கையில் முதல் முறையாக தாய் நாட்டை விட்டு இங்கு வந்திருப்பதாக வேதனை தெரிவித்தார் அந்தப்பெண்.
தான் ஒரு விவசாயி என்று 4 ஆயிரம் முதலீடு செய்தால் 3 ஆயிரம் தான் கிடைக்கின்றது என்பதால் இந்தியா போனால் நல்லா இருக்கலாம் என்ற எண்ணத்துடன் இங்கு வந்ததாக அந்தப்பெண்ணின் கணவர் தெரிவித்தார்.
இவர்கள் 4 பேருடன் சேர்ந்து பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ள சூழலில் தமிழகத்தை நாடிவரும் அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது அங்கு தங்கி உள்ள மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Comments