தற்சார்பு இந்தியா மற்றும் தேசிய உணர்வை எழுப்பியதற்காக பிரதமர் மோடிக்கு லோகமான்ய திலக் தேசிய விருது

0 1243

நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு சேவை புரிந்ததற்காக லோகமான்ய திலகர் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் முன்னிலையில் நிகழ்ச்சி தொடங்கியதும் பிரதமர் மோடி, திலகர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பை மீறி நிகழ்ச்சியில் பங்கேற்ற சரத்பவாருடன் கைகுலுக்கி, பிரதமர் மோடி நலம் விசாரித்தார். தொடர்ந்து திலக் நினைவு அறக்கட்டளை சார்பில் பிரதமர் மோடிக்கு சால்வை அணிவித்து, விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பரிசுத்தொகையான ஒரு லட்ச ரூபாயை கங்கை நதி காக்கும் திட்டத்திற்கு வழங்குவதாக அறிவித்தார். விருதினை 140 கோடி இந்திய மக்களுக்கும் சமர்பிப்பதாகவும் அவர் கூறினார்.

சுதந்திர போராட்ட வீரர் லோகமான்ய திலகர், தேசபக்திமிக்க இளைஞர்களை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தியவர் என்று மோடி பாராட்டினார். அவ்வாறு இளைஞர்களை அடையாளப்படுத்தப்பட்டவர்களில் வீர் சாவர்க்கரும் ஒருவர் என்றும் பிரதமர் கூறினார். முன்னதாக புனேயில் உள்ள கணபதி கோயிலில் பிரதமர் வழிபாடு நடத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments