டுவிட்டர் தலைமை அலுவலகத்திலிருந்து அகற்றப்பட்ட 'எக்ஸ்' லோகோ.. அதிகப்படியான ஒளி வீசுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு ..!!
சான் பிரான்சிஸ்கோ நகரிலுள்ள டுவிட்டர் தலைமை அலுவலகத்தில் மூன்று நாட்களுக்கு முன் வைக்கப்பட்ட பிரமாண்ட எக்ஸ் லோகோ பொதுமக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து அகற்றப்பட்டது.
டுவிட்டர் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோ-வை, அண்மையில் எக்ஸ் என எலான் மஸ்க் மாற்றினார். இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தின் மேற்கூரையில் பிரமாண்டமான எக்ஸ் லோகோ நிறுவப்பட்டது.
அதிலிருந்து வெளிப்பட்ட அதிகப்படியான வெளிச்சம் எரிச்சலூட்டுவதாக அப்பகுதி மக்கள் புகாரளித்தனர். அதை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் மேற்கூரை மீதிருந்த லோகோ-வை அப்புறப்படுத்தினர்.
Comments