NDA எம்.பி.க்களுடன் ஆலோசனை : மக்களிடம் நெருங்கிப் பழகுங்கள், மக்களுக்காக அதிக நேரம் செலவிடுங்கள் - பிரதமர் மோடி

0 1027

தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையைத் தொடங்கியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 10ம் தேதி வரை பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்பிக்களுடன் தேர்தல் வியூகம் அமைக்க பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

நேற்று உத்தரப்பிரதேச மாநில எம்பிக்களை சந்தித்தபோது, ராமர் கோவிலை மட்டும் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தாமல் மக்களின் உள்ளூர் பிரச்சினைகளையும் பேச அறிவுறுத்தினார்.

மக்களுடன் அதிக நேரம் செலவழியுங்கள் என்றும் மோடி தெரிவித்தார். நாளை தமிழ்நாடு, புதுச்சேரி கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு அந்தமான் நிகோபார் தீவுகளின் எம்பிக்களை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments