பழனி முருகன் கோயிலில் அகற்றப்பட்ட இந்து அல்லாதவர் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் பழைய இடத்திலேயே வைக்க உத்தரவு..

0 10514

பழனி முருகன் கோயிலில் அகற்றப்பட்ட இந்து அல்லாதவர் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் பழைய இடத்திலேயே வைக்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. 

பழனியை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் தாக்கல் செய்திருந்த வழக்கில், இந்து அல்லாத எந்த ஒரு சமயத்தினரும் இந்து கோயிலுக்குள் நுழைவதை இந்து அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி 1947 தடுப்பதாக குறிப்பிட்டிருந்தார். தெய்வத்தின் மீது நம்பிக்கை இல்லாத நபர்களும் மாற்று மதத்தை நம்புகிறவர்களும் இந்து கோவிலுக்குள் நுழைய வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிந்திருந்த மனுதாரர், பழனி தேவஸ்தானத்தால் வைக்கப்பட்டிருந்த இந்து அல்லாதோர் கோயிலுக்குள் நுழையத் தடை என்ற அறிவிப்பு பலகையை தற்போதைய செயல் அலுவலர் நீக்கியதாக கூறியிருந்தார்.

இந்து அல்லாத சிலர் கோயிலுக்குள் நுழைய முயற்சி செய்த பிறகே பதாகைகள் நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, இந்து அல்லாதவர்கள் கோயிலில் நுழைய தடை என்ற பதாகை அகற்றப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினார். இந்து அல்லாதோர் கோயிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் அதே இடத்தில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி, தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments