மருத்துவர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் காவல் ஆய்வாளர் கைது.. !!
செங்கல்பட்டு மாவட்டத்தில் மருத்துவர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்தவர் மகிதா அன்ன கிறிஸ்டி.
இவரிடம் காட்டாங்குளத்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 17 வயது மகள் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்த விசாரணையில் சிறுமிக்கு மறைமலை நகர் வானவில் மருத்துவமனை மற்றும் சிங்கப் பெருமாள் கோயில் சக்தி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று மாத்திரைகள் வாங்கி கருக்கலைப்பு செய்ததாக சிறுமியின் தாயார் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து மகிதா அன்னகிறிஸ்டி, இரு மருத்துவமனைகளில் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக மருத்துவர்களை மிரட்டி 12 லட்சம் ரூபாய் லஞ்சமாக வாங்கியது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து தாம்பரம் காவல் ஆணையர் நடத்திய விசாரணையில் மகிதா பணம் பெற்றது உறுதியானதால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதனிடையே மகிதா மீது மருத்துவர்கள் அளித்த புகாரின் பேரில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நெஞ்சுவலிப்பதாகக் கூறி மயங்கிய மகிதா அன்னகிறிஸ்டி செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Comments