மணிப்பூர் கலவரத்தை விரைவில் கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் தேசிய பாதுகாப்பு பிரச்சினையாகும் - 21 எம்பிக்கள் கொண்ட குழு எச்சரிக்கை

0 1295

மணிப்பூர் கலவரத்தை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் அது தேசிய அளவிலான பாதுகாப்பு பிரச்சினையை ஏற்படுத்தி விடும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் குழு தெரிவித்துள்ளது.

வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கள ஆய்வு செய்ய 16 கட்சிகளை சேர்ந்த 21 எம்பிக்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, இரண்டு நாளாக ஆய்வு மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்த இக்குழுவினர் நேற்று மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்க்கேவை  சந்தித்து தங்கள் கருத்துப் பதிவேட்டை சமர்ப்பித்தனர்.

மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் வன்முறையைக் கைவிட்டு அரசின் சமாதான முயற்சிகளுக்கு ஒத்துழைக்க அனைத்துக்கட்சிக் குழுவினர் முயற்சிக்க வேண்டும் என்று அப்போது ஆளுநர் கேட்டுக் கொண்டார். இதற்கிடையே, மத்திய அரசும் மணிப்பூர் மாநில அரசும் செய்த தவறுகளைப் பட்டியலிட்டு மணிப்பூர் தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் குழு வலியுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments